×

சென்னை பல்கலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்த நிலையில் துணைவேந்தர் கவுரி இன்றுடன் ஓய்வு: முறைகேடுகளை விசாரிக்க கவர்னர் அனுமதி தரவில்லை

சென்னை: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக கவுரி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ம் தேதி நியமிக்கப்பட்டார். அவரின் 3 ஆண்டு பதவிகாலம் நேற்றுடன் முடிந்தது. இன்று அவர் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய துணைவேந்தரை நியமனம் செய்வது தொடர்பான தேடுதல் குழுவை அரசு அறிவிக்கும். அதன்பின்னர் தேடுதல் குழு பரிந்துரைக்கும் நபர்களில், தகுதியானவர்களை ஆளுநர் நியமனம் செய்ய உள்ளார். இதற்காக பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட குழு அமைப்பது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஒப்புதல் பெறுவதற்கு சிண்டிகேட் கூட்டம் சில நாட்களுக்கு முன்பு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பெறப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில், 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணைவேந்தரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரரிக்கை அரசு முடிவு செய்து, இதற்காக ஆளுநரிடம் அனுமதி கேட்டு மார்ச் 9ல் அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதில், ஊழல் தடுப்புச் சட்டம் (திருத்தம்) 2018 பிரிவு 17ஏ(1)-ன்கீழ் சென்னை பல்கலை. ஏற்கனவே பல்கலை கழக துணைவேந்தர் கவுரி மீது லஞ்ச ஒழிப்புதுறையின் விசாரணைக்கு இன்னும் ஆளுநரின் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை பல்கலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்த நிலையில் துணைவேந்தர் கவுரி இன்றுடன் ஓய்வு: முறைகேடுகளை விசாரிக்க கவர்னர் அனுமதி தரவில்லை appeared first on Dinakaran.

Tags : Vice-Chancellor ,Gowri ,Chennai University ,Chennai ,
× RELATED மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு